சினிமா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘KILLER’…!ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா..!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘KILLER’…!ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா..!
பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தற்போது இயக்கி நடித்து வரும் புதிய படம் ‘KILLER’. உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூலை 19) ‘KILLER’ படத்தின் இரண்டு புது போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா, இன்று மேலும் ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் அளித்துள்ளார். இந்த புதிய போஸ்டரில், எஸ்.ஜே.சூர்யா ஒரு மிரட்டலான, மர்மமான தோற்றத்தில் காணப்படுகிறார். படத்தின் ஸ்டைல் மற்றும் முத்திரையை வெளிப்படுத்தும் வகையில், இந்த போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.