Connect with us

பொழுதுபோக்கு

முன்னாள் மனைவி கொடுத்த அனுபவம்; என்ன நடந்தாலும், ஹார்ட் டிஸ்க் என்கிட்ட தான் வரணும்: தனுஷ் போட்ட கண்டிஷன்!

Published

on

Dhanush Viral Vidowe

Loading

முன்னாள் மனைவி கொடுத்த அனுபவம்; என்ன நடந்தாலும், ஹார்ட் டிஸ்க் என்கிட்ட தான் வரணும்: தனுஷ் போட்ட கண்டிஷன்!

தன்னுடைய திரைப்படங்களின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை, நடிகர் தனுஷ் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதாகவும், இதற்கு ‘3’ படத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தான் காரணம் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் வரிசையில் தனுஷும் ஒருவர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இப்படத்தில் யாசகம் பெரும் நபராக தனுஷ் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தை திரையில் மிக நுட்பமாக தனுஷ் கையாண்டார் என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இது தவிர பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள தனுஷ், இதில் சிலரின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பிஸியான நடிகராக தனுஷ வலம் வருகிறார். மேலும், தனுஷின் முதல் இந்தி திரைப்படமான ‘ராஞ்சனா’ விரைவில் மறுவெளியீட்டிற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் தனுஷ் தொடர்பான ஒரு தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, நடிகர் தனுஷ், தான் நடிக்கும் படங்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை படப்பிடிப்பு முடிந்ததும் எடுத்துச் சென்று, மீண்டும் மறுநாள் படப்பிடிப்பிற்கு வரும் போது அதனை கொண்டு வருவதாக ஒரு தகவல் பரவுகிறது. இதற்கு ‘3’ படத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.கடந்த 2012-ஆம் ஆண்டில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ், ஷ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘3’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். இந்தப் படம் வெளியான போது வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், ரீ-ரிலீஸின் போது இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடல் உலக அளவில் வைரல் ஹிட்டானது.ஆனால், இந்தப் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாக ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனதாகவும், இதன் காரணமாக இணையத்தில் கசிந்ததாகவும் கூறப்படுகிறது. பாடல் ஹிட்டானாலும் கூட, ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனதை தனுஷால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், இதன் காரணமாக தனது படங்களின் ஹார்ட் டிஸ்க் விஷயத்தில் அவர் கவனமாக இருப்பதாகவும் ஒரு தகவல் சமீபத்தில் பரவுகிறது.எனினும், இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். ‘லால் சலாம்’ படத்திற்கும் ஹார்ட் டிஸ்க் தொடர்பாக பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்ட நிலையில், அப்படத்தையும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன