சினிமா
“Peddi” படத்திற்காக ராம் சரண் இப்டி மாறிட்டாரா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

“Peddi” படத்திற்காக ராம் சரண் இப்டி மாறிட்டாரா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் ராம் சரண், அவரது அடுத்த முயற்சியான “Peddi” படத்திற்காக முற்றிலும் புதிய அவதாரத்தில் களமிறங்க உள்ளார். புச்சி பாபு சனா இயக்கும் இந்த படத்துக்கான கதை, கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் தாக்கத்தை உணர்வதற்காக, ராம் சரண் தனது உடலை முழுமையாக மாற்றியிருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த மெக்ஓவர் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உடலை அழுத்தமாக காட்டிய அழகான கோணங்களோடு, அவரது புதிய கெட்டப்பை பார்த்த ரசிகர்கள், “இது ரொம்ப வித்தியாசமா இருக்கே!”, என தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.’Peddi’ படத்துக்காக எடுத்துள்ள புதிய புகைப்படத்தில் ராம் சரண் தனது பிசிகல் டிரான்ஸ் ஃபர்மேஷனை வெளிப்படையாக காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.