சினிமா
கமல்ஹாசன் மீது காதல்! அவரின் வார்த்தையால் மனம் உடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

கமல்ஹாசன் மீது காதல்! அவரின் வார்த்தையால் மனம் உடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன்
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. தற்போது, இந்த நிகழ்ச்சியில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில், கல்லூரி காலத்தில் கமல்ஹாசன் மீது இவருக்கு இருந்த காதல் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” நான் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே கமல்ஹாசனை காதலித்தேன். ஒருமுறை வாய்ப்பு கிடைத்தபோது அவரை நேரில் பார்க்கச் சென்றேன்.அப்போது என் காதலை அவரிடம் சொல்ல முற்பட்டபோது, திடீரென அவர் என்னை ‘தங்கை’ என்று அழைத்துவிட்டார். இதனால் என் காதலை அவரிடம் சொல்லாமல் வந்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.