பொழுதுபோக்கு
3 காதல் சொதப்பல், எனக்கு அவ்வளவு பெரிய சீன்லா இல்ல; காதல் வாழ்க்கை பற்றி பிரகிடா ஓபன் டாக்!

3 காதல் சொதப்பல், எனக்கு அவ்வளவு பெரிய சீன்லா இல்ல; காதல் வாழ்க்கை பற்றி பிரகிடா ஓபன் டாக்!
தனது காதல் வாழ்க்கை தொடர்பான படத்திற்கு காதலில் சொதப்புவது எப்படி என்ற டைட்டில் தான் பொறுத்தமாக இருக்கும் என்றும், 3 முறை காதலில் சொதப்பியுள்ளதாகவும் நடிகை பிரகிடா சஹா கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியாக அயோக்யா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரகிடா. அதற்கு முன்பே பிளாக்ஷிப்பில், ஆஹா கல்யாணம் தொடரில் பவி டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானதால் பலரும் அவரை பவி டீச்சர் என்றே அழைத்து வருகின்றனர். அயோக்யா படத்திற்கு பிறகு, துருவ் விக்ரமின் வர்மா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தது.தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமாக மாஸ்டர் படத்தில் விஜயின் மாணவிகளில் ஒருவராக நடித்திருந்தார். கொரோனா லாக்டவுன் முடிந்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற முதல் படமாக மாஸ்டர் படம் உள்ளது. அதன்பிறகு வேலன் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்தாக இவர் நடித்த படம் தான் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் ஷாட் முறையில் எடுக்கப்பட்ட இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.இரவின் நிழல் படம் மூலமாகத்தான், பிரகிடா சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில், கருடன், கோழிப்பண்ணை செல்லதுரை, படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில், அவரை நடித்து காட்ட சொல்ல, அவரும் நடித்து காட்டியுள்ளார். அதன்பிறகு, அவரது நலம் விரும்பி ஒருவர் எழுதிய கடிதம் என்றை படிக்கிறார். அதில் “பிரகிடா ஓ பிரகிடா நீ என் தங்க தகடா” என்று தொடங்க, பிரகிடா வெட்கத்தில் தலைகுணிகிறார். அதன்பிறகு, அவரது பெற்றோர் பெயர், நடிப்பு குறித்து பாராட்டுக்களுடன் இந்த லெட்டர் முடிகிறது. இதை கேட்ட பிரகிடா ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க, அப்பா அம்மா பெயர் சரிதான். அந்த தங்க தகடுனு சொன்னது தான் ஒரு மாதிரி ஆகுது என்று கூறியுள்ளார்.மேலும், இதை கேட்டு யாரும் திட்டாமல் இருந்தால் சரி, உண்மையில் எனக்கு அவ்யோ சீன் இருக்கா? அவ்ளோலாம் இருக்க மாதிரி தெரியலையே. எனது நடிப்பை பார்த்து எஞ்சாய் பண்றாங்க அதுவரைக்கும் சந்தோஷம் என்று சொல்ல, அடுத்து அவரது காதல் வாழ்க்கை படத்திற்கு என்ன டைட்டில் என்று கேட்க, காதலில் சொதப்புவது எப்படி என்று கூறியுள்ளார். அதேபோல் 3 முறை காதலில் சொதப்பியுள்ளதாக கூறியுள்ளார்.