பொழுதுபோக்கு
கடைசி நாள் ஷூட், எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி; வி.ஜே.மணிமேகலை திடீர் பதிவு!

கடைசி நாள் ஷூட், எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி; வி.ஜே.மணிமேகலை திடீர் பதிவு!
ஜீ தமிழின் டானடஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த வி.ஜே.மணிமேகலை, தற்போது ஜீ தமிழில் தனக்கு கடைசி நாள் சூட்டிங் என்று வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் விஜே மணிமேகலை. சன் மியூசிக் சேனலில், 2010-ம் ஆண்டு தொடங்கிய சூப்பபு ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக களமிறங்கிய இவர், அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தொகுத்து வழங்கிய டைம்பாஸ், சினிமா எக்ஸ்பிரஸ், ஒன்பை டூ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மததியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சன் நெட்வொர்ககில் பிஸியாக தொகுப்பாளியாக வலம் வந்த மணிமேகலை, டான்ஸ் மாஸ்டர் ஹுசைனை காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு சின்னத்திரையில் இருந்து விலகினார். அதன்பிறகு ஒரு இடைவெளிக்கு பிறகு, மீண்டும் சின்னத்திரைக்கு வந்த அவர், விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மணிமேகலைக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து. இதில் தொகுப்பாளியாக இல்லாமல் கோமாளியாக இருந்தார்.குக் வித் கோமாளி 5-வது சீசனில் தொகுப்பாளினியாக பங்கேற்ற வி.ஜே.மணிமேகலை, மற்றொரு தொகுப்பாளர் பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இவர்கள் இருவருமான மோதல் இணையத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது, அதன்பிறகு சில மாதங்களில் ஜீ தமிழின் டான் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி ரீலோட் 3 சீசனில் தொகுப்பாளினியாக மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கினார்.A post shared by Mani Megalai (@iammanimegalai)டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் என்டர்டெய்னர் தொகுப்பாளர் என்ற பட்டம் மக்கள் மத்தியில் இவருக்கு கிடைத்தது. இவரது திறமையை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் கடைசி நாள் ஷூட்டிங் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று குறிப்பிட்டு, நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் பாராட்டுக்கு மக்களுக்கு, இந்த வாய்ப்பு தனக்கு கிடைப்பதற்கு காரணமானதாக இருந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.