Connect with us

இலங்கை

ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்; அச்சத்தில் பயணிகள்

Published

on

Loading

ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்; அச்சத்தில் பயணிகள்

  இந்தியா கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை இறங்கியது.

Advertisement

இன்று காலை கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா A320, AI-2744 விமானம், மும்பை விமான நிலையத்தில் கனமழை காரணமாக ஓடுபாதையில் ஒரு பயணத்தை மேற்கொண்டது. விமானம் ஓடுபாதை 27 இல் இருந்து விலகிச் சென்றது,

மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில் , கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார். எனினும் ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இது குறித்து, எயார் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது,

விமானம் தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

Advertisement

விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேவேளை கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால், பயணிகள் அச்சமடைந்ததாகவும் இந்திய ஊட்ச்கங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன