இலங்கை
400 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்ட குடிநீர் போத்தல்!

400 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்ட குடிநீர் போத்தல்!
பத்தரமுல்ல பகுதியில் உள்ள அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட சுற்றுலா விடுதியில், 70 ரூபாக்கு விற்கப்பட வேண்டிய குடிநீர் போத்தல் 400 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
500ml குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70 என்றாலும், இந்த சுற்றுலா ஹோட்டல் ஒரே அளவிலான இரண்டு குடிநீர் போத்தல்களுக்க ரூ.800 வசூலித்துள்ளது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இரண்டு குடிநீர் போத்தல்களிலும் மினரல் வாட்டர் என பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பிலும் நுகர்வோர் விவகார அதிகாரசபை விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.