சினிமா
தமிழ் மொழி பற்றி காந்தாரா பட நாயகன் சொன்ன விஷயம்! கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் மொழி பற்றி காந்தாரா பட நாயகன் சொன்ன விஷயம்! கொண்டாடும் ரசிகர்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களும் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டி இருந்தனர்.கர்நாடக மக்களின் பழமை வாய்ந்த வரலாற்றை கூறுகின்ற ஒரு படமாக காந்தாரா திரைப்படம் காணப்பட்டது. இந்த படம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.d_i_a20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு 450 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் ஹிட் படமாக மாறியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் செட்டி இதன் அடுத்த பாகம் உருவாகும் என கூறியிருந்தார். அதன்படி கூடிய விரைவிலேயே இந்த படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸ் ஆக உள்ளது.இந்த நிலையில், காந்தாரா படத்தின் நாயகன் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலா கி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், நான் பெங்களூர் பையன்.. மினி இந்தியா மாதிரி அங்க எல்லா மக்களும் இருப்பாங்க.. 2004 ல நான் ஒரு தமிழ் படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணினேன். படத்துக்காக அவங்க பண்ண வேலை எனக்கு ரொம்ப புடிச்சது.. அது ஒரு பெரிய டீம்.. எல்லாரும் தமிழ்ல பேசுவாங்க.. அவங்க கூட இருந்த அந்த 27 நாள்ல நான் தமிழ் கத்துக்கிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.