Connect with us

இலங்கை

வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் ; கணினி அவசர பிரிவு எச்சரிக்கை!

Published

on

Loading

வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் ; கணினி அவசர பிரிவு எச்சரிக்கை!

இந்த நாட்களில் வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல்வேறு பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்யப்பட்டதாகவும், சந்தாதாரர்களுக்கு பணம் வழங்குமாறு கோரி குறுந்தகவல் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

இதன் காரணமாக, தகவலை நம்பி கொடுக்கப்பட்ட கணக்கு எண்களில் சிலர் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, கையடக்க தொலைபேசிகளுக்கு வரும் இரகசிய இலக்கத்தையோ அல்லது ஒருமுறை வழங்கப்படும் OTP இலக்கத்தையோ எவருக்கும் வழங்கக்கூடாது என்பதை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு என்ற வகையில் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், உங்களுக்குத் தெரியாத எந்த தொலைபேசி எண்ணையும் உங்கள் கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement

மேலும், அவ்வாறு பணம் கேட்டால் பணம் வழங்கி ஏமாற வேண்டாம் என்றும் , எச்சரிக்கையாக செயற்படுமாறும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன