பாலிவுட்
தொடர்ந்து சினிமாவை விட்டு விலகும் பாலிவுட் நட்சத்திரங்கள்.. என்னதான் ஆச்சு

தொடர்ந்து சினிமாவை விட்டு விலகும் பாலிவுட் நட்சத்திரங்கள்.. என்னதான் ஆச்சு
12th fail படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் விக்ராந்த் மாசி.. 12th fail படத்தில் இவரது நடிப்பு நம்மை கண்கலங்க வைத்தது. மேலும் கனவு காண வைத்தது. அந்த படம் இவரது மார்க்கெட்டை பல மடங்கு தூக்கி கொண்டு போயி நிறுத்திய இந்த தருவாயில், அவர் சினிமா விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது 37 வயதில் ஓய்வை அறிவித்துள்ளார் விக்ராந்த் மாசி.. இதற்க்கு காரணமாக அவர் கூறியது, “குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்”என்பது தான்.. இருப்பினும் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்க்கு காரணம் nepotism தான் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவரது ஓய்வு, ரசிகர்கள் மத்தியில் “பாலிவுட்-க்கு என்ன தான் ஆச்சு..” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏன் என்றால், சமீபத்தில் நடிகர் அமீர் கான், இன்னும் 5 வருடத்தில் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தார். அதற்க்கு காரணமாக அவர் சொன்னதும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன் என்பது தான்..
மேலும் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சினிமாவில் இருந்து முழுமையாக விலகாமல் குறைவான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரன்வீர் சிங்கும் தற்போது குறைவான படங்களில் தான் நடிக்கிறார். இவர்களுக்கு வாய்ப்பு வந்தும், படங்களை குறைத்துக்கொண்டுள்ளனர்.
அனைவரும் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தான் உண்மை. இது ஆரோக்கியமான ஒன்றாக தான் பார்க்க முடிகிறது. படம் இன்று போகும், நாளை வரும்.. ஆனால் குடும்பம் மட்டும் தான் எல்லா ஏற்ற இறக்கங்களிலும் தன்னுடன் பயணிக்கும் என்பதை நன்கு உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.