இந்தியா
ஆபாச பட விநியோகம்.. ஷில்பா ஷெட்டி கணவருக்கு அமலாக்கத் துறை முக்கிய உத்தரவு!

ஆபாச பட விநியோகம்.. ஷில்பா ஷெட்டி கணவருக்கு அமலாக்கத் துறை முக்கிய உத்தரவு!
ஆபாசப் படங்களை தயாரித்து விநியோகித்த புகாரில் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ஆம் ஆண்டில் மும்பை காவலர்களால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமினில் ராஜ் குந்த்ரா விடுவிக்கப்பட்டார். எனினும் தம்மீதான புகார்களை அவர் மறுத்துள்ளார்.
98 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாகவும், பிட்காயின் மோசடிகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பில் ராஜ்குந்த்ரா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க அமலாக்கத் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக ராஜ் குந்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.