வணிகம்
கூடுதல் இ.எம்.ஐ முதல் குறுகிய காலம் வரை; உங்கள் தனிநபர் கடனை விரைவாக அடைக்க உதவும் ஸ்மார்ட் டிப்ஸ்

கூடுதல் இ.எம்.ஐ முதல் குறுகிய காலம் வரை; உங்கள் தனிநபர் கடனை விரைவாக அடைக்க உதவும் ஸ்மார்ட் டிப்ஸ்
தனிநபர் கடன் உடனடியாக நிதி உதவியை வழங்கினாலும், இ.எம்.ஐ மற்றும் வட்டி செலவுகளையும் உள்ளடக்கியது ஆகும். கடனை முன்கூட்டியே செலுத்துவது உங்கள் சுமையை குறைப்பதுடன், வட்டியையும் மிச்சப்படுத்தும். குறுகிய காலக் கடனாக இருந்தாலும் சரி அல்லது நீண்ட காலக் கடனாக இருந்தாலும் சரி, சரியான வழிமுறை நன்மையை ஏற்படுத்தும். உங்கள் தனிநபர் கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்த உதவும் சில எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.உங்கள் இ.எம்.ஐ தொகையை படிப்படியாக அதிகரிக்கவும்:உங்கள் வருமானம் அதிகரிக்கும்போது, இ.எம்.ஐ தொகையையும் அதிகரிக்கலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை சேர்ப்பது, திருப்பி செலுத்தும் காலத்தையும், வட்டி செலவையும் கணிசமாக குறைக்கும். கடன் காலம் முழுவதும் கடன் வழங்குபவர்களுடன் இ.எம்.ஐ-களை மாற்றிக் கொள்ளலாம். இதனை சரிபார்க்க ஆன்லைன் இ.எம்.ஐ கால்குலேட்டர்கள் மூலம் கணக்கிடுங்கள்.கடன் தொடங்கும்போதே குறுகிய காலத்தை தேர்வு செய்யவும்:நீண்ட கால கடன்கள் இ.எம்.ஐ தொகையை குறைத்தாலும், ஒட்டுமொத்தமாக அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். அதிக இ.எம்.ஐ செலுத்துவதில் உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால், கடன் வாங்கும்போதே குறுகிய காலத்தை தேர்வு செய்யவும். இது உங்களுக்கு ஒட்டுமொத்த செலவை சேமிப்பது மட்டுமல்லாமல், கடனை முன்கூட்டியே செலுத்துவதையும் உறுதி செய்கிறது. சிறந்த நிதி ஒழுக்கம் மற்றும் சீரான வருமானம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.இ.எம்.ஐ-களை தாமதப்படுத்துவதை தவிர்க்கவும்:உங்கள் இ.எம்.ஐ-களை சரியான நேரத்தில் செலுத்துவது கடனை கட்டுக்குள் வைத்திருக்கும். ஒரு இ.எம்.ஐ-யை தவறவிடுவது அபராதங்களுக்கு வழிவகுக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோரை இது பாதிக்கும். மேலும், உங்கள் கடனின் கால அளவையும் அதிகரிக்கும். இதற்காக ஆட்டோ-டெபிட் வழிமுறைகளை அமைக்கவும். அந்த வகையில், உங்கள் தனிநபர் கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்துவதுவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு புத்திசாலித்தனமான திட்டமிடல் மட்டுமே தேவைப்படும். கூடுதலாக செலுத்துவது, கால அளவை அதிகரிப்பது, குறுகிய காலங்களை தேர்ந்தெடுப்பது மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவை உங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தும். மேலும், விரைவில் கடன் இல்லாதவராகவும் உங்களை மாற்றும். உங்கள் நிதி எதிர்காலத்தை இன்னும் சீராக்க இப்போதே இந்த முறைகளை செயல்படுத்துங்கள்.