சினிமா
விஜய் சேதுபதி மார்க்கெட் இன்னும் குறையல போலயே.! “தலைவன் தலைவி” முதல் நாளே சாதனை..

விஜய் சேதுபதி மார்க்கெட் இன்னும் குறையல போலயே.! “தலைவன் தலைவி” முதல் நாளே சாதனை..
பெரும்பாலான திரைப்படங்களில் பாண்டிராஜ் குடும்பப் பின்னணியின் அடிப்படைப் பார்வையை முன்வைப்பவர். ஆனால் ‘தலைவன் தலைவி’ என்ற புதிய முயற்சியில், காதலும், சமூக அரசியலும் இணைந்த முறையில் கதை சொல்லப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.நேற்று [ஜூலை 25, 2025] வெளியான இத்திரைப்படம், தமிழகத்தில் அதிகளவான திரையரங்குகளில் வெளியாகி ஹவுஸ் ஃபுல் என்கின்ற நிலையை உருவாக்கியது.இந்நிலையில் அப்படத்தின் முதல்நாள் வசூல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் மட்டும் “தலைவன் தலைவி” படம் 12 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.