இலங்கை
சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்று ஆற்றில் குதித்த கைதி மாயம்

சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்று ஆற்றில் குதித்த கைதி மாயம்
சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்று மகாவலி ஆற்றில் குதித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி தற்போது காணாமல் போயுள்ளார்.
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இந்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன நபர் சீதுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.