இந்தியா
கொட்டும் மழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கொட்டும் மழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
தமிழகத்தில் சேலம், நீலகிரி, கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 3) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழையால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.