Connect with us

பொழுதுபோக்கு

எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா… நான் இப்போ 7 மாத கர்ப்பம்: சீரியல் நடிகை அகிலா ஹேப்பி!

Published

on

Akila Serial Actress

Loading

எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா… நான் இப்போ 7 மாத கர்ப்பம்: சீரியல் நடிகை அகிலா ஹேப்பி!

சின்னத்திரையில் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் நெகடீவ் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வரும் நடிகை அகிலா, சீரியலில் எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கு, நான் இப்போ 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் எனக்கு குடும்பம் என தனிப்பட்ட உரிமை அவர்களை வெளியில் இருப்பவர்கள் பார்க்க எனக்கு விருப்பம் இல்லைஎன்றும் கூறியுள்ளார்.சன் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது சின்னத்திரை அறிமுகத்தை பெற்ற அகிலா, அதன்பிறகு, ராதிகா நடித்த செல்வி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். அந்த சீரியலை தொடர்ந்து, மலர்கள், ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள், கல்யாண பரிசு, சக்தி, அழகு, முந்தாணை முடிச்சு,அஞ்சலி, அபூர்வ ராகங்கள், அருந்ததி, முள்ளும் மலரும் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.பாசிட்டிவ் நெகட்டிவ் என அனைத்து கேரக்டர்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் அகிலா, சன் டிவி மட்டும் இல்லாமல், ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகியுள்ள அவர், டெலி விகடனுக்கு அளித்த பேட்டியில், தனது படிப்பு, குடும்பம்,தனது கர்ப்பகால ஞாபகங்கள் குறித்து பேசியுள்ளார்.கர்ப்பமாக இருந்தால் ஒருவருக்கு ஒருமுறைதான் வளைகாப்பு நடக்கும். ஆனால் எனக்கு தினம் தினம் வளைகாப்பு தான். அபியும் நானும் சீரியலில் நடிக்கும்போது அந்த சீரியலின் இயக்குனர் எப்போமா என்னை தாய் மாமா ஆக்குவ என்று கேட்டுக்கொண்டே இருப்பார். 5-வது மாத்த்தில் எனக்கு வளைகாப்பு நடந்த விஷயம் தெரிந்து நான்தானே முதலில் வளையல் போட வேண்டும். அதற்குள் யார் போட்டது என்று கோபித்துக்கொண்டார். சீரியலில் என்னுடன் நடித்த பல நடிகைள், எனக்கு தினம் தினம் வளைகாப்பு நடத்தி வருகிறார்கள்.அபியும் நானும் சீரியலில் நடித்த முகில் என்ற சிறுவனின் அம்மா என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அவர் வளைகாப்பு செய்யும்போது அனைத்து நகைகளும் அவர் தான் கொண்டு வந்தார். கோலங்கள் சீரியலில் எனக்கு அம்மாவாக நடித்த பாரதி அம்மாவும் எனக்கு வளைகாப்பு நடத்தினார். எனக்கு 27 வயதில் ஒரு பொண்ணு இருக்கா, அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியலில், ஹீரோயின் அவள் தான். அவளும் எனக்கு நண்பர்களும் சேர்ந்து வளைகாப்பு செய்தார்கள் என்று கூறியுள்ளார்,மேலும், எனது குடும்பம் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அதை வெளியுலகில் யாரும் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அதனால் தான் சமூகவலைதளங்களில் எனது குடும்பம் குறித்து எந்த பதிவும் வெளியிடவில்லை. அவர்களுக்கும் அது பிடிக்கவில்லை. அதேசமயம், எனக்கு நடிப்பு வாழ்க்கையில் எனது குடும்பத்தினர் சாப்போர்ட் அதிகம். நான் மருத்துவ டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது என்னால் முடியவில்லை என்பதால் இப்போது அகாடமிக் டாக்டர் ஆக முயற்சித்து வருகிறேன். வேல்ஸ் யுனிவர்சிட்டில் பி.எச்.டி பண்றேன்.எனது கணவர் எனக்கு எல்லா வகையிலும் சப்போர்ட்டாக இருக்கிறார். உங்க வீட்டில் டாக்டர் ஆக்க வேண்டும் என்று நினைத்தது நடக்கவில்லை. அதனால் நீ இப்படி டாக்டர் பட்டம் வாங்கிவிடு என்று சொல்லி அவர் தான் என்னை பி.எச்.டி படிக்க வைக்கிறார். கர்ப்பமாக இருந்தாலும், அவர் தான் என்னை அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு கூட்டி வருகிறார் என்று அகிலா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன