இலங்கை
அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் கோர விபத்து!

அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் கோர விபத்து!
அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் நேற்று (25.07) இடம்பெற்ற கோர விபத்தில் 05 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
பஸ் மற்றும் கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது கெப் வாகனத்தின் சாரதியும் பஸ்ஸில் பயணித்த நால்வரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை