இந்தியா
கேரளா சிறையில் இருந்து தப்பியோடிய கற்பழிப்பு மற்றும் கொலை குற்றவாளி கைது

கேரளா சிறையில் இருந்து தப்பியோடிய கற்பழிப்பு மற்றும் கொலை குற்றவாளி கைது
கேரளாவில் கடந்த 2011ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சௌமியா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவரது அறையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிந்தசாமி தனது உயர் பாதுகாப்பு அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
CCTV காட்சிகளின்படி, அவருக்கு வெளியிலிருந்து உதவி கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவர் பதுங்கியிருக்கும் இடம் தொடர்பான ரகசிய தகவலின் பேரில் தப்பியோடிய கோவிந்தசாமியை கண்ணூர் போலீசார் கைது செய்தனர்.
23 வயது சௌமிய, பிப்ரவரி 1, 2011 அன்று எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கிச் செல்லும் ஒரு பயணிகள் ரெயிலில் தனியாகப் பயணம் செய்தபோது, தமிழகத்தின் விருதாச்சலத்தை சேர்ந்த கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கோவிந்தசாமிக்கு இந்த கொடூரக் கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை