Connect with us

இலங்கை

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

Published

on

Loading

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது.

 வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

Advertisement

 பாதிக்கப்பட்ட மக்கள், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

 1.ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதிப்பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

 2.ஈழத்தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதிப்பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படரமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

Advertisement

 3.தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.

 4.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும். 

 5.ஸ்ரீலங்காவில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

Advertisement

 6.செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.

 7.தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும். 

(இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)

Advertisement

 8.தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

 9. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் இரத்து செய்ய ஸ்ரீலங்கா அரசிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் இறுதியில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்கள்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1753481845.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன