இலங்கை
கொழும்பில் செம்மணி போராட்டத்திற்கு எதிர்ப்பு!

கொழும்பில் செம்மணி போராட்டத்திற்கு எதிர்ப்பு!
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த போராட்டம் செம்மணிக்கு நீதிக் கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இன்று முன்னெடுக்கப்படுகிறது.
போராட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எனினும் உந்துருளியில் வந்த ஒருவர் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.