Connect with us

இலங்கை

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலுக்கு சண்டை போடும் நாடுகள்!

Published

on

Loading

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலுக்கு சண்டை போடும் நாடுகள்!

  ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியான Preah Vihear-ல் உள்ள தா மோன் தாம் கோயில் மற்றும் 817 கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை உரிமை கொள்வதில் நீண்டகாலமாக சிக்கல் நிலவுகிறது.

Advertisement

ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதற்கு பாரம்பரிய அந்தஸ்து கோரி யுனெஸ்கோவை கம்போடிய அரசு அணுகியதால் தாய்லாந்தில் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில், கடந்த மே மாதம் இருநாடுகளுக்கும் இடையே நடந்த மோதலில் கம்போடியா ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

Advertisement

இதனால் தாய்லாந்து உடனான உறவை கம்போடியா முறித்துக் கொண்டது. இருப்பினும் அவ்வப்போது இருநாடுகளும் எல்லையில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளின் எல்லையோர கிராமங்கள் காலி செய்யப்பட்டு ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காஸா என அடுத்தடுத்த போர்களால் உலகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கம்போடியா – தாய்லாந்து இடையிலான பதற்றம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன