Connect with us

பொழுதுபோக்கு

சிவாஜி ரசிகனா இருந்த நான், எம்.ஜி.ஆர் வெறியனா ஆகிட்டேன்; அதற்கு காரணம் இதுதான்; ரஜினிகாந்த் உடைத்த ரகசியம்!

Published

on

MGR Rajinikanth

Loading

சிவாஜி ரசிகனா இருந்த நான், எம்.ஜி.ஆர் வெறியனா ஆகிட்டேன்; அதற்கு காரணம் இதுதான்; ரஜினிகாந்த் உடைத்த ரகசியம்!

தமிழ் சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருவருமே தனிச்சிறப்புமிக்க முன்னணி நடிகர்கள். அவர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டியை எதிர்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்கள் இருவரும் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர் நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானார். சுமார் 10 ஆண்டுகள் துணை மற்றும் இரண்டாவது நாயகன் வேடங்களில் நடித்த பிறகு, அவர் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்தார். அதன்பிறகு பல வெற்றிப் படங்களைக் கொடுத்து திரையுலகில் புரட்சித் தலைவராக வலம் வந்தார். அதேபோல நாடக நடிகராக இருந்தாலும், பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன். அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த சிவாஜி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இப்படியாக சினிமாவில் இவர்கள் இருவரின் நடிப்பையும் யாராலும் அசைக்க முடியாது. அப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு சிவாஜியைவிட எம்.ஜி.ஆரை அதிகம் பிடித்ததற்கான காரணம் குறித்து பேசியிருக்கும் வீடியோ ஒன்று டாக்கீஸ் திரை யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி குறித்துப் பேசுகையில், “நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாரின் ரசிகன். நான் சென்னைக்கு வந்து சினிமா துறைக்கு வந்த பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவர் திரைக்குப் பின்னால் எப்படி வாழ்ந்தார் என்பதையும், அவரது சாதனைகளையும் பார்த்த பிறகு, நான் அவரது பெரிய ரசிகனாக மாறிவிட்டேன். இப்போது நான் அவரைப் பற்றிப் பேசும்போது, நான் ஒரு பெரிய வெறியன் போல உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நிகழ்வு எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரும் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் வைத்திருந்த மரியாதையையும், திரையுலகில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எவ்வளவு மகத்தான ஆளுமைகளாக இருந்தார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தொழில்முறையில் இருவரின் படங்களும் மோதலில் இருந்தாலும், இருவருககும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது குறிப்பிடத்தகக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன