இலங்கை
13 பெண்கள் உட்பட 16 பேர் கைது

13 பெண்கள் உட்பட 16 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 13 பெண்கள் உட்பட 16 பேர் வாதுவை பொலிஸாரால் நேற்று (25) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வாதுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 3 வயது பிள்ளையை கையில் சுமந்திருந்த தாயொருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 1,008,000 ரூபா பணம் மற்றும் சூதாட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.