பொழுதுபோக்கு
பவர்ஃபுல் கேரக்டர்,கமல் தானே பண்ணணும்; யார் இவன் ரஜினிகாந்த்? தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு; சவால் விட்ட பாலச்சந்தர்!

பவர்ஃபுல் கேரக்டர்,கமல் தானே பண்ணணும்; யார் இவன் ரஜினிகாந்த்? தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு; சவால் விட்ட பாலச்சந்தர்!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த, ஆரம்பத்தில் பல சிக்கல்கள் மற்றும் அவமானங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். குறிப்பாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் தான் பெரிய அவமானங்களை சந்தித்தாக ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் ரஜினிகாந்த். தொடர்ந்து பாலச்சந்தர் உள்ளிட்ட பல இயக்குனர்களில் படங்களில் நடித்திருந்த இவர், கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்மதுள்ளார். அதேபோல் சிவக்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்தும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த கடைசி படம் நினைத்தாலே இனிக்கும்.அதற்கு முன்பாக, அபூர்வ ராகங்கள் படத்திற்கு பிறகு, கே.பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம் 1976-ம் ஆண்டு வெளியானது. கமல்ஹாசன் ஸ்ரீதேவி இணைந்து நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் காதலிப்பார்கள். ஆனால் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆற்றில் மூழ்கும்போது அவரை காப்பாற்றாமல் விட்டுவிடுவார். இதனால் கோபமான ஸ்ரீதேவி, ரஜினிகாந்தை பழிவாங்க, அவரது அப்பாவை திருமணம் செய்துகொண்டு ரஜினிக்கு சித்தியாக மாறிவிடுவார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, கமல்ஹாசன் ஸ்ரீதேவி ரஜினிகாந்த் ஆகிய மூவரும் தான் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்கள் என்பதை முடிவு செய்த இயக்குனர் கே.பாலச்சந்தர், அதை தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார். குறிப்பாக வில்லன் பிரசாத் கேரக்டரில் ரஜினிகாந்த் தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும், என்ன இது மெயின் கேரக்டர் கமல்ஹாசன் தானே பண்ண வேண்டும், யார் இந்த ரஜினிகாந்த், அவன் முடி, கலர் என்ன, பேசுறது தமிழா என்ன ஒன்னும் புரியல.இவனை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறாரே என்ன செய்வது என்று கேட்டுள்ளனர். அவர்கள் மட்டும் அல்லாமல் கே.பாலச்சந்தர் நண்பர்களும் ஏன் இவரை வைத்து படம் பண்றீங்க என்று கேட்டார்கள். அப்போது கே.பாலச்சந்தர், நான் கமல்ஹாசனை அறிமுகம் செய்து ஒரு நட்சத்திரமாக கொண்டுவந்துவிட்டேன். தமிழ் திரையுலகுக்கு ஒரு நல்ல நடிகனை அறிமுகம் செய்ய வேண்டும் அதுதான் என் நோக்கம். இந்த படத்தில் இவனை நடிக்க வைத்து படம் ஓடவில்லை என்றால் நான் திரைத்துறைவிட்டே வெளியேறிவிடுகிறேன்.இந்த படத்தில் விட்டுவிடுங்கள், நீங்கள் பாருங்கள் என்று சொல்லி, ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ரஜினிகாந்த் நடிப்பில் படத்தை தொடங்கியுள்ளார். அந்த படத்தில் நான் தவறு செய்யும்போது என்னை திட்டுவதோடு மட்டும் இல்லாமல் அடித்துள்ளார். நான் தவறு செய்யும்போது முதலிலேயே சொன்னேனே இவனை போட்டு எடுக்காத என்று ஏளனம் பேசினார்கள். இதை பார்த்த நான் எனக்காக இவ்வளவு எதிர்ப்பை தாங்கிக்கொள்கிறார். இவருக்காவாது இந்த படத்தில் சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.இந்த படம் சரியாக ஓடி 100 நாட்கள் கடந்துவிட்டால் போதும் அதன்பிறகு நான் பஸ் கண்டக்டராக போய்விட்டாலும் பரவாயில்லை என்று ரஜினிகாந்த் முடிவு செய்து நடித்துள்ளார். இந்த தகவலை ரஜினிகாந்தே ஒரு மேடையில் கூறியுள்ளார்.