Connect with us

இலங்கை

திருமணமான இளம் பெண்ணிடம் தரகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல் ; தமிழர் பகுதியில் சம்பவம்

Published

on

Loading

திருமணமான இளம் பெண்ணிடம் தரகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல் ; தமிழர் பகுதியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணச் சேவை தரகரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண தரகர், ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்து அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.

Advertisement

இந்த நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்து வந்துள்ள நிலையில், வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக நுழைந்து வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெறித்துவிட்டு சென்றுள்ளார்.

திருமண தரகரின் இந்த செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில், குறித்த திருமண தரகர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) பகல் பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன