இலங்கை
இலங்கையில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ரயில் பயணங்கள் ரத்து

இலங்கையில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ரயில் பயணங்கள் ரத்து
கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில்கள் தடம்புரள்வு மற்றும் இரத்து செய்யபட்ட ரயில் விபரங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 15 முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை 5,305 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 101 ரயில்கள் தடம் புரண்டதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.