சினிமா
துரோகமும் விமர்சனமும் மீறி முன்னேறும் இசையமைப்பாளர்!நேர்காணலில் மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்!

துரோகமும் விமர்சனமும் மீறி முன்னேறும் இசையமைப்பாளர்!நேர்காணலில் மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்!
சமூக ஊடகக் கலகலப்பும், மாறிக்கொண்டிருக்கும் புகழும் நிறைந்த இந்த காலக்கட்டத்தில், ஒரு பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் உண்மையான வெற்றி என்பது மரியாதை, அமைதி மற்றும் தொடர்ச்சியான உழைப்பு என்பதையே நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இசை மற்றும் திரைப்படத் துறையில் தனது 20 ஆண்டுகால பயணத்தை நோக்கி செல்லும் அவர், சமீபத்திய நேர்காணலில் தன் வாழ்க்கை, நட்பு, தொழில் தத்துவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டார். “2001 முதல் பள்ளி நண்பர்கள். நட்பு என்றால் மரியாதை முக்கியம். இன்று நாங்கள் இருவரும் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். அந்த நம்பிக்கையும், பரஸ்பர மதிப்பும் தொடர்ந்து இருக்கிறது,” எனக் கூறுகிறார்.