Connect with us

இலங்கை

ரணிலை பின்பற்றும் அரசாங்கம் – அநுர அரசின் கொள்கைகள் குறித்து நாமல் விமர்சனம்!

Published

on

Loading

ரணிலை பின்பற்றும் அரசாங்கம் – அநுர அரசின் கொள்கைகள் குறித்து நாமல் விமர்சனம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

 கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

பொருளாதார மீட்சிக்காக இந்த அரசாங்கம் இதுவரையில் முறையான திட்டங்களை செயற்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த பொருளாதார கொள்கைகளையே முழுமையான செயற்படுத்துகிறது என்றும் கல்வி துறையில் உண்மையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் முதலில் நீக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் தான் பகிடிவதை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.இன்றும் செயற்படுத்துகிறது.ஆகவே சிறந்த கல்வி மறுசீரமைப்புக்கு அரசாங்கம் இவ்விரு விடயங்களையும் செயற்படுத்த வேண்டும். 

Advertisement

 நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி மறுசீரமைப்பு செயற்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.கல்வி மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கொள்கையை கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்க இடமளிக்க முடியாது என்றார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1753644807.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன