இலங்கை
சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 10 ஆயிரம் பேரை இணைக்கத் திட்டம்

சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 10 ஆயிரம் பேரை இணைக்கத் திட்டம்
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்துப் போதைப்பொருள் வலையமைப்பையும் தடுப்பதற்கு, சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமாகும். எனவே, போதைப் பொருள் தடுப்புச் செயற்றிட்டத்துக்காக, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையப்படுத்தி சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதிருந்து இந்தப்பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – என்றார்.