வணிகம்
Gold Rate Today, 28 july: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate Today, 28 july: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய நிலவரம் என்ன?
இந்தியாவில், தங்கம் என்பது ஒரு முதலீடாக மட்டுமின்றி, கலாச்சார மற்றும் உணர்வுபூர்வமான மதிப்பையும் கொண்டுள்ளது. திருமணங்கள், பண்டிகைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் தங்கம் வாங்குவது மரபாக உள்ளது. தங்கத்தின் விலை ஸ்திரமாக இருக்கும்போது, நுகர்வோர் மத்தியில் வாங்கும் ஆர்வம் பொதுவாக அதிகரிக்கும்.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, பங்குச் சந்தை நிலவரம், மற்றும் உலகப் பொருளாதாரச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இந்த காரணிகளில் பெரிய மாற்றங்கள் இல்லாததால், இன்று தங்க விலையில் ஸ்திரத்தன்மை நீடிக்கிறது. பொதுவாக, தங்கத்தின் விலை அதிகரிப்பது அல்லது குறைவது என்பது பொருளாதார நிலவரத்தின் பிரதிபலிப்பாகும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை அதிகரித்து கொண்டே இருந்து. சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்து தங்கம் ரூ.73,280 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,160 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று மாற்றமின்றி அதே விலை தொடர்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கட்கிழமை) எந்த மாற்றமும் இன்றி, சவரன் ரூ73,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,160 ஆகவும் நீடிக்கிறது. வெள்ளி விலையிலும் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.