இலங்கை
திலினி பியமாலி அதிரடியாக கைது

திலினி பியமாலி அதிரடியாக கைது
பிரபல வர்த்தகரான திலினி பியமாலி இன்று திங்கட்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம நீதிமன்றில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு கடமைகளை செய்ய இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பிரபல வர்த்தகரான திலினி பியமாலிக்கு ஹோமாகம நீதவான் ரஜிந்தா ஜயசூரிய அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து பிரபல வர்த்தகரான திலினி பியமாலி இன்றைய தினம் காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகிய போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பிரபல வர்த்தகரான திலினி பியமாலியை நீதிமன்றில் ஆஜர்படுத்த ஹோமாகம பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.