Connect with us

பொழுதுபோக்கு

என் பேரு விஜயகாந்த், நீ எனக்கு கட்டுப்படனும்; போலீஸ் சொன்னதாக,மகன் கைதான விவகாரத்தில் மன்சூர் அலிகான் கண்ணீர் பேட்டி!

Published

on

mansoor alikhan

Loading

என் பேரு விஜயகாந்த், நீ எனக்கு கட்டுப்படனும்; போலீஸ் சொன்னதாக,மகன் கைதான விவகாரத்தில் மன்சூர் அலிகான் கண்ணீர் பேட்டி!

பிரபல திரைப்பட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் மீது சென்னையில் புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 67 வயது முதியவர் ஒருவரை 35 லட்சம் ரூபாய் கடன் தொடர்பாக மிரட்டியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அலிகான் துக்ளக் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “என் மகன் கொடுக்க வேண்டிய காசைத்தான் கேட்கச் சென்றான். அப்போது அந்த முதியவர் உடனடியாக 100-க்கு போன் செய்து காவல்துறையை வரவைத்துவிட்டார். வந்த காவல்துறையினரும் என் மகன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டார்கள்.உடனே, பத்திரிகைகளில் மன்சூர் அலிகானின் மகன் கைது என்று செய்தி வெளியாகிவிட்டது. கடந்த 35 வருடங்களாகவே, பத்திரிகைகளில் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தான் செய்திகள் வெளியாகின்றன” என்று குற்றம் சாட்டினார். மகன் மீது தவறு செய்யாமலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி கண்கலங்கினார்.முன்னதாக, தனது மகன் கஞ்சா வழக்கில் தவறு செய்தது தெரிந்தபோது, காவல்துறையினர் முன்னிலையிலேயே மகனை அடித்து போலீசில் பிடித்துக் கொடுத்ததாகவும், தற்போது தன் மகன் தவறு செய்யாமலேயே கைதாகி இருப்பதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார். மேலும், காவல்நிலையத்தில் இருந்த ஒரு ஆய்வாளர் தன்னை “விஜயகாந்த்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “நான் விஜயகாந்த், நீ மன்சூர் அலிகான் என்பதால் எனக்கு கட்டுப்பட வேண்டும்” என்று கூறியதாகவும், துணை ஆய்வாளர் பெயர் பிரபாகரன் என்றும், இதுபோன்ற பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு அதன்படியே வாழ நினைப்பதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.தற்போது நான் ஒரு ஆல்பம் ஒன்றை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். அது விரைவில் வெளிவர இருக்கிறது. எப்போதெல்லாம் நான் அடுத்த அடி எடுத்து வைக்கிறேனோ அப்போதெல்லாம் என்னை அவமானப் படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். காவல்துறையினர் என்னை விஜய், சூர்யா, அஜித் போல அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது எல்லாம் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வில்லன்கள் தான் தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள் என்றார்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன