Connect with us

பொழுதுபோக்கு

கேரவன் செல்ல 2 லட்சம், பாலியல் தேவைக்கு 50 ஆயிரம்; விஜய் சேதுபதி மீது பகிர் குற்றச்சாட்டு: மௌனம் கலைப்பாரா?

Published

on

Vijay Sethupathi Maharaja

Loading

கேரவன் செல்ல 2 லட்சம், பாலியல் தேவைக்கு 50 ஆயிரம்; விஜய் சேதுபதி மீது பகிர் குற்றச்சாட்டு: மௌனம் கலைப்பாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்து பிஸியான நடிகராக வலம் வரும் நிலையில், அவர் மீது போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சமூகவலைதளத்தில் ஒரு பெண் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு, “சூப்பர் டீலக்ஸ், 96, விக்ரம் வேதா, மகாராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் பேட்ட, மாஸ்டர், விக்ரம் மற்றும் இந்தியில் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லன் கேரக்டரிலும் அசத்தியுள்ளார். தனது நடிப்பால், அனைவரையும் கவர்ந்த அவர் மீது தற்போது பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ரம்யா மோகன் என்ற சமூக வலைதள பயனர் ஒருவர், விஜய் சேதுபதி தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய அவரது பதிவு தற்போது நீக்கப்பட்டுவிட்டது. நீக்கப்பட்ட அந்தப் பதிவில், திரைத்துறையில் நிலவும் ஒரு நச்சுத்தன்மையுள்ள கலாச்சாரத்தை விஜய் சேதுபதி ஊக்குவிப்பதாகவும், போதைப்பொருட்கள், படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட குற்றசாட்டுகளை குறிப்பிட்டுள்ளார்.கோலிவுட்டின் போதைப்பொருள் மற்றும் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் ஒரு ஜோக் அல்ல. எனக்குத் தெரிந்த ஒரு பெண், இப்போது மீடியாவில் பிரபலமான முகம், அவள் ஒருபோதும் விரும்பாத ஒரு உலகத்திற்குள் இழுக்கப்பட்டாள். அவள் இப்போது ஒரு மறுவாழ்வு மையத்தில் இருக்கிறாள். போதைப்பொருள், தில்லுமுல்லு, மற்றும் கொடுக்கல் வாங்கல் சுரண்டல் ஆகியவை திரைத்துறை நியமங்களாக மாறுவேடமிட்டுள்ளன.விஜய் சேதுபதி கேரவன் செல்ல’ ரூ. 2 லட்சம், பாலியல் தேவைக்காக ரூ. 50 ஆயிரம் கொடுத்துள்ளார், சமூக வலைதளங்களில் புனிதர் போல் நடிக்கிறார். அவர் அவளை பல வருடங்களாகப் பயன்படுத்தியுள்ளார். இது ஒன்று மட்டும் அல்ல. இதுபோன்று பல உள்ளன. ஆனால் ஊடகங்கள் இந்த மனிதர்களை புனிதர்கள் போல் போற்றுகின்றன. போதைப்பொருள்-பாலியல் தொடர்பு நிஜம். இது ஒரு ஜோக் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.தனது மற்றொரு பதிவில், இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவும் உணர்வின்மை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள ரம்யா மோகன் “சில உணர்வற்ற முட்டாள்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை விட, ஆதாரத்தைக் கேள்வி கேட்பதிலும், பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதிலும் கவனம் செலுத்துவது பைத்தியக்காரத்தனம். இந்த உண்மை, அவள் டைரி மற்றும் போன் உரையாடல்களைப் பார்த்தபோது குடும்பத்தை ஒரு புயல் போல தாக்கியது. இது வெறும் கதை மட்டுமல்ல. இது அவளுடைய வாழ்க்கை, அவளுடைய வலி என்று பதிவிட்டுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் கோடம்பாக்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன