Connect with us

இந்தியா

போப் பிரான்சிஸை தமிழ்நாட்டுக்கு அழைத்த இனிகோ இருதயராஜ்

Published

on

Loading

போப் பிரான்சிஸை தமிழ்நாட்டுக்கு அழைத்த இனிகோ இருதயராஜ்

திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்துள்ளார்.

கடந்த 30ஆம் தேதி வாடிகனில் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் ஆண்டவரை சந்தித்த, திருச்சி கிழக்கு திமுக எம்.எல்.ஏவும், கிறிஸ்த்துவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ், ‘ஸ்ரீ நாராயண தர்மா சங்கம் அறக்கட்டளை’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் அனைத்து மத மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

Advertisement

இதுகுறித்து நேற்று (டிசம்பர் 2) அவர் தனது முகநூல் பக்கத்தில், “புனித பூமியான வாடிகனில் திருத்தந்தை His Holiness Pope ஃபிரான்சிஸை சந்தித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய இறைமகன் இயேசுவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவில் கிறிஸ்தவர்களின் நிலை தமிழகத்தில் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களுக்கு நிறைவேற்றப்படும் சீர்மிகு திட்டங்கள் குறித்தும், அதனால் அவர்களின் ஏற்றமிகு வாழ்க்கை சூழல் குறித்தும் எடுத்துரைத்ததோடு அவரை இந்தியாவிற்கு வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.

இந்திய வருகையின் போது,தவறாமல் தமிழகத்திற்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், தங்களை வரவேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் என்கின்ற தகவலையும் தெரிவித்தேன்.

Advertisement

எளியோன் என் வார்த்தைகள் அனைத்தையும் திருத்தந்தை கனிவோடும் , கவனத்துடனும் கேட்டுக் கொண்டார்.

மனித நேயத்தின் அடிப்படையில் மதங்கள் ஒன்றிணைவது என்கின்ற அடிப்படையில் செயல்படும் மாநாட்டிற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன் வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளுக்கு இடையே இணக்கமான மனிதர்களின் வாழ்வை உறுதிப்படுத்தவும், அமைதியை உருவாக்கி அதனூடே பயணிக்கும் வகையில் நாம் நமது உறவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

Advertisement

மரியாதை, கண்ணியம், கருணை, நல்லிணக்கம் சகோதர ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கக் கூடிய அனைவருடனும் கைக்கோர்த்தும், ஒன்றிணைந்தும் அவர்களுக்கு ஒத்துழைப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, இதன் மூலம் தனிமனித ஒழுக்கம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க முடியும் என்றும், வன்முறை கலாச்சாரத்தைத் தோற்கடிக்க முடியும் என்று தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன