சினிமா
இட்லி கடை’ படத்தில் தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் கசிந்தது!

இட்லி கடை’ படத்தில் தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் கசிந்தது!
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பிலும் இயக்கத்திலும் தயாரிப்பிலும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் மாஸ் காட்டி வருகிறார்.
தன்னுடைய படங்களில் மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களுக்கும் இவர் பாடல்கள் பாடி வருகிறார்.
அடுத்ததாக இவரது இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாக இருக்கின்றது.
இதனிடையே அடுத்ததாக இட்லி கடை படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கிராமத்து பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த அவதாரங்களையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக குபேரா படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைய தயாராகி வருகிறார் தனுஷ்.
இதனிடையே தன்னுடைய இயக்கத்திலும் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ராயன் படம் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் வெளியாகியிருந்தது.
படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் சிறப்பாக இரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியமை குறிப்பிடத்தக்கது.