சினிமா
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் எப்படி இருக்கு!! டிவிட்டர் விமர்சனம் இதோ..

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் எப்படி இருக்கு!! டிவிட்டர் விமர்சனம் இதோ..
இயக்குநர் கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி ஜூலை 31 ஆம் தேதி இன்று ரிலீஸாகியுள்ளது கிங்டம் படம். அனிருத் இசையில் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.நடிகர் நானி நேற்றிரவு அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் கிங்டம், காந்த, கூலி, வார் 2 போன்ற படங்கள் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சீசனாக அமையப்போகிறது, அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றிப்பெற வேண்டும் என்று ஈகோ இல்லாமல் பாராட்டி இருந்தார். இதற்கு துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா போன்ற நடிகர்கள் நானியை பாராட்டினர்.இந்நிலையில் கிங்டம் படத்தை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் படத்துக்கு கொடுத்து வரும் விமர்சனங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.கிங்டம் படத்திற்காக உடல் எடையை அதிகரித்து, மொட்டையடித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படத்திற்காக எந்தளவிற்கு வேண்டுமானாலும் உழைப்பை கொட்டலாம் என்று விஜய் தேவரகொண்டா உழைத்துள்ளார் என்று அவரின் பர்ஃபார்மன்ஸை பாராடியும் வருகிறார்கள்.கிங்டம் படத்தின் முதல் பாதி சாலிட்டாக தொடங்கினாலும், இரண்டாம் பாதி ரொம்பவே தலையை சுத்தி மூக்கைத்தொடும் கதையாக மாறி டல் அடித்ததாக சிலர் கூறி வருகிறார்கள்.தெலுங்கு விமர்சகரான வெங்கி, விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு வெறும் 2.75 டேட்டிங் தான் கொடுத்திருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள், விஜய் தேவரகொண்டா நடிப்பு என அனைத்தும் நன்றாக இருந்தாலும் படம் எங்கேயும் எமோஷ்னலாக கனெக்ட் ஆகவில்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.