Connect with us

பொழுதுபோக்கு

30 நாள் தான் டைம், அதுக்குள்ள ஒல்லி ஆகனும்; அப்போ இந்த சான்ஸ் உனக்கு தான்; ராஜமாதாவுக்கு செக் வைத்த ரவிக்குமார்!

Published

on

ks ravikumar

Loading

30 நாள் தான் டைம், அதுக்குள்ள ஒல்லி ஆகனும்; அப்போ இந்த சான்ஸ் உனக்கு தான்; ராஜமாதாவுக்கு செக் வைத்த ரவிக்குமார்!

2002 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் பஞ்சதந்திரம். இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படத்தில், கமலுடன் இணைந்து நடித்த நான்கு நண்பர்களின் நகைச்சுவை காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், தேவயானி போன்ற நடிகர்களின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பெரும் பலம் சேர்த்தன.இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் கதாப்பாத்திரத்திற்காக அவரை உடல் எடையை குறைக்க சொன்ன ஒரு சம்பவத்தை பற்றி கே.எஸ்.ரவிக்குமார் பிஹைன்வுட்ஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, ரம்யா கிருஷ்ணன் ஏற்ற மேகி கதாபாத்திரம் தனித்துவமானது. துணிச்சலான, நகைச்சுவையான அந்த கதாபாத்திரத்தின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க படக்குழு அணுகியது நடிகை நக்மாவைத்தான்.அவரிடம், 30 நாட்களில் உடல் எடையைக் குறைத்து நடிக்க வேண்டும் என படக்குழு நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு நக்மாவால் ஒப்புக்கொள்ள முடியாததால், அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது. இது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணனின் நடிப்புத் தேர்வு குறித்து மனம் திறந்து பேசினார். மேகி கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருப்பார் என கமல்ஹாசன் கூறியதாகவும், ரம்யா கிருஷ்ணனிடம் உடல் எடையைக் குறைக்கும்படி அவர் நிபந்தனை விதித்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்தார். ரம்யா கிருஷ்ணனால் உடல் எடையை குறைக்க முடியுமா என கமல்ஹாசனுக்கு சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அவர் உடல் எடையைக் குறைத்து, ஒரு பாடலில் மிகவும் அழகாகவும் மெலிந்தும் தோன்றியதாக ரவிக்குமார் குறிப்பிட்டார். ரம்யா கிருஷ்ணனின் இந்த அர்ப்பணிப்பே மேகி கதாபாத்திரத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறது என்றார்.மேலும் இந்த கதாப்பாத்திரத்திற்கு முதலில் நடிகை நக்மா தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பின்னர் ரம்யா கிருஷ்ணன் முடிவு செய்யப்பட்டு உடல் எடை குறைக்க சொன்னதாகவும் அவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உடல் எடையைக் குறைத்து, ஒரு பாடலில் மிகவும் அழகாகவும் மெலிந்தும் தோன்றியதாக இயக்குநர் ரவிக்குமார் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன