Connect with us

இலங்கை

பாடசாலை கணக்குகளும் நம் உரிமையும் – பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய தகவல்

Published

on

Loading

பாடசாலை கணக்குகளும் நம் உரிமையும் – பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய தகவல்

இன்று பல பாடசாலைகளில் கல்விச் சுற்றுலா
(school tour), விழாக்கள், போட்டிகள், சமாரம்பங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக
மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவை அனைத்தும் முறையாக
கணக்குப் படுத்தப்பட்டு, பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ளும்
வகையில் விளக்கப்படுகிறதா? என்பது ஒரு பெரிய சந்தேகமாக இருக்கிறது.

என்ன நடக்கிறது?

பல
இடங்களில் ஒரு மாணவரிடமிருந்து ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால்
உணவுக்கு என்ன செலவாயிற்று, போக்குவரத்துக்கு எவ்வளவு செலவானது? வேறு என்ன
செலவுகள் வந்தன? என்றெல்லாம் தெளிவாகவே தகவல்தரப்படுவது குறைவாகவே
காணப்படுகிறது.

Advertisement

நாம் என்ன செய்யலாம்?

பெற்றோர் மற்றும் மாணவர்கள் உங்கள் பணத்திற்கு நீதி கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.
செலவுகளை விளக்குமாறு பாடசாலை நிர்வாகத்திடம் கேட்கும் உரிமை உள்ளது.
தகவல் தர மறுக்கப்பட்டால் அல்லது சந்தேகம் நீங்கவில்லையெனில், வலயக் கல்வி அலுவலகத்துக்கு முறைப்பாடு அனுப்பலாம்.

மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்ப வேண்டிய முகவரி:
புத்தளம் வலயக் கல்வி அலுவலகம் – zdeputtalam@gmail.com

உங்கள்
மின்னஞ்சலில் நிகழ்வு தேதி, பணம் வசூலிக்கப்பட்ட வகை, மாணவர் எண்ணிக்கை,
பெற்ற சேவைகள், பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை சேர்த்து அனுப்பலாம்.

Advertisement

முகவரி (புத்தளம் வலயக் கல்வி அலுவலகம்):
Zonal Education Office,
Kurunegala Road,
Puttalam,
Sri Lanka.

கடிதத்தில் சேர்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

1. உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விபரம்
2. மாணவர்/பாடசாலை பெயர் (குறைந்தபட்சம் கல்வி சுற்றுலா விவரம்)
3. நிகழ்வு நடைபெற்ற தேதி
4. பெறப்பட்ட பணம் மற்றும் வழங்கப்பட்ட சேவைகள்
5. சந்தேகத்திற்கு இடமளிக்கும் விபரங்கள்
6. உங்கள் கோரிக்கையையும் சுருக்கமாக எழுதுங்கள் (எ.கா: கணக்கு விவரங்களை வழங்குமாறு)

இந்தச் செய்தியின் நோக்கம்:

பாடசாலைகள்
நம் பிள்ளைகளின் இரண்டாவது வீடு. ஆனால் அந்த இடத்திலேயே கணக்கில் நேர்மை
இல்லாமல் இருந்தால், அது எதிர்காலத்திற்கு ஆபத்தானது.

Advertisement

எனவே,
பெற்றோர் மற்றும் சமூகமாக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கேள்வி
கேட்பது குற்றமல்ல  அது நியாயமான உரிமை. இந்த செய்தியை பகிருங்கள்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754073867.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன