டி.வி
பொலீஸுக்கு முன்னால் அழுதபடி கெஞ்சி மண்டாடும் ரோகிணி… விடாப்பிடியாக நிற்கும் மீனா.!

பொலீஸுக்கு முன்னால் அழுதபடி கெஞ்சி மண்டாடும் ரோகிணி… விடாப்பிடியாக நிற்கும் மீனா.!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, பொலீஸ் சிற்றியை ஜெயிலுக்குள்ள விட்டுட்டு முத்துவை ரிலீஸ் பண்ணிவிடுறார். மேலும் ரோகிணியை அரெஸ்ட் பண்ணுறதுக்காக விஜயா வீட்டுக்கு ரெண்டு பொம்பிள பொலீஸை அனுப்பிவிடுறார். பின் மீனா முத்துவை பார்த்து ரோகிணி இந்த மாதிரியான வேலை பண்ணுவாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று சொல்லுறார்.அதைக் கேட்ட முத்து இது என்ன புதுசா என்று கேட்கிறார். பின் மீனா ரோகிணியை பொலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறதுக்காக வீட்ட வாறார். இதனைத் தொடர்ந்து மீனா வீட்ட வந்து ரோகிணியை பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட ரோகிணி என்ன விஷயம் என்று சொல்லாமல் நீங்க பாட்டுக்கு கத்திக் கொண்டிருக்காதீங்க என்று சொல்லுறார்.பின் மீனா வீட்டில இருந்த ஆட்களுக்கு ரோகிணி தான் சிற்றியை விட்டு ரதியோட லவ்வர் வீட்டு ஆட்களை அடிக்கச் சொன்னது என்று சொல்லுறார். மேலும் உண்மையே பேச தெரியாதோ என்று பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பொலீஸும் அங்க வந்து நிற்கிறார்கள். பின் அண்ணாமலை ரோகிணியை பார்த்து ஒரு குடும்பத்தில இருக்கிற பொண்ணு பார்க்கிற வேலையா இது என்று கேட்கிறார்.அதனை அடுத்து ரோகிணியை பொலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்கள். ரோகிணி பொலீஸ் கிட்ட நான் அடிக்க எல்லாம் சொல்லேல சும்மா போய் பேசிட்டு வாங்க என்று தான் சொன்னேன் என்கிறார். பின் பொலீஸ் ரோகிணி பெயரில கம்பிளைன்ட் எழுத சொல்லுறார். அதைக் கேட்ட உடனே ரோகிணி பொலீஸிட்ட கெஞ்சிச் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.