Connect with us

பொழுதுபோக்கு

சீரியல் டியூட்டி சூப்பர்; வெப் தொடரில் கமிட் ஆன கயல் நடிகை: ஹீரோ யார் தெரியுமா?

Published

on

Screenshot 2025-08-02 110748

Loading

சீரியல் டியூட்டி சூப்பர்; வெப் தொடரில் கமிட் ஆன கயல் நடிகை: ஹீரோ யார் தெரியுமா?

சைத்ரா ரெட்டி தமிழ் சின்னத்திரையில் தனது பயணத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடரின் மூலம் தொடங்கினார். அந்த தொடர் முடிவடைந்த பிறகு, அவர் நேராக ஜீ தமிழ் சேனலுக்கு சென்று ‘யாரடி நீ மோகினி’ என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.அந்த தொடருக்குப் பிறகு, அவர் சன் டிவிக்கு வந்தார்.  தற்போது ‘கயல்’ என்ற தொடரில் நடிகர் சஞ்சீவிற்கு நாயகியாக நடித்துவருகிறார். இந்த சீரியல் வெற்றிகரமாகவும் பிரபலமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடித்து அசத்திய இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் வெப் தொடர்கள் அதிகமாக வெளியாகிறது. அப்படி ஒரு வெப் தொடரில் தான் இப்போது ‘கயல்’ நடிகை சைத்ரா ஓப்பதமாகியுள்ளார். அந்த தொடரின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள். ‘லவ் ரிட்டர்ன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரியலில் சைத்ரா ரெட்டி நாயகியாகவும், குரு லக்ஷமன் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெப் சீரியலை சரிகமப நிறுவனம் தயாரிக்கிறது.குரு லக்ஷ்மன் என்பவர் யூடியூப் வீடியோக்களிலும், பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஆபீஸ்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘கயல்’ சீரியல் மூலம் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்து கலக்கி மக்களின் மனதை வென்ற சைத்ரா இந்த தொடரின் மூலமும் தனது ரசிகர்களை வியக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிக்கவில்லையென்றாலும் சைத்ராவின் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன