Connect with us

இலங்கை

பொதுமக்களின் பிரச்சனைகளை செவிமடுங்கள்! பாராளுமன்றில் பிரதமர் ஹரிணி

Published

on

Loading

பொதுமக்களின் பிரச்சனைகளை செவிமடுங்கள்! பாராளுமன்றில் பிரதமர் ஹரிணி

இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாக அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாக மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இன்றைய நாடாளுமன்ற உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Advertisement

தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.

Advertisement

 இந்த தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 எங்களிற்கு இந்த தேசத்தின் பிரஜைகள் விடுத்துள்ள சவாலை கரங்களில் எடுங்கள் பொதுமக்கள் என்ன தெரிவிக்கின்றார்கள் என்பதை செவிமடுங்கள்,

நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை சிறந்த இடமாக மாற்றுவோம்.

Advertisement

நீண்ட காலமாக, நமது நாட்டின் நிர்வாகம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது, இதன் காரணமாக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

 ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.

 மக்கள் நிராகரிப்பது அரசியலை அல்ல, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கலாசாரத்தையே நிராகரிக்கின்றார்கள்.

Advertisement

 ஒருபோதும் காணாத பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது பாராளுமன்றில் காணப்படுகிறது.

மேலும் எமது அமைச்சரவையில் உரிய துறையுடன் மிகவும் பொருத்தமானவர்களையே அப் பதவிகளுக்கு நியமித்துள்ளோம். 

தேசிய பட்டியல் விடயத்திலும் நாம் பல்வேறு கருத்துகளை உள்வாங்கி சரியானவர்களை நியமித்தோம்.

Advertisement

 அத்தோடு பயங்கரவாதத்தை முற்றாக புறக்கணிப்போம். எம்மோடு இணைந்து செயற்பட அனைவரும் முன்வாருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன