இலங்கை
இரவில் யுவதியின் மோசமான செயல்; ஆடிப்போன கடைக்காரர்

இரவில் யுவதியின் மோசமான செயல்; ஆடிப்போன கடைக்காரர்
தங்கச் சங்கிலி ஒன்றை திருட முயன்ற 26 வயதுடைய யுவதி ஒருவர், ஹட்டன் நகரில் உள்ள நகை கடையில் வைத்து சமயோசிதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு, ஹட்டன் இரண்டாம் பிரதான வீதியில் அமைந்துள்ள நகை கடையில், கணக்கு விவரங்களை பரிசீலித்துக் கொண்டிருந்த உரிமையாளரிடம் ஒரு யுவதி வந்து தங்கச் சங்கிலி ஒன்றைக் காண்பிக்க கேட்டுள்ளார்.
சங்கிலியை காண்பித்து கொண்டிருந்த நிலையில், யுவதி ஒரே நேரத்தில் தனது கைப்பையில் இருந்து வலி நிவாரணி திரவ போத்தலை எடுத்துக் கொண்டு உரிமையாளரின் முகத்தில் வீச முயன்றுள்ளார்.
இந்நிலையில் அதனை தடுத்து, யுவதியின் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளார்.
உடனடியாக வீதியோரத்தினரை உதவிக்கு அழைத்த நகை கடை உரிமையாளர், யுவதியை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
யுவதி கைது செய்யப்பட்டதுடன், அவரது கைப்பையில் இருந்து கவரிங் நகைகள் மற்றும் பணத் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதி அப்கொட் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதா எனவும் ஹட்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.