Connect with us

இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டவரைபிற்கு முழுமையான ஆதரவு! – எதிர்க்கட்சி எம்.பி. அறிவிப்பு!

Published

on

Loading

முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டவரைபிற்கு முழுமையான ஆதரவு! – எதிர்க்கட்சி எம்.பி. அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.    

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Advertisement

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டவரைபு தொடர்பில் தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. 

தர்மத்தின் அடிப்படையில் இந்த சட்டவரைபு சரியானது. 

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு அரச செலவில் வாழ்நாள் முழுவதும் சலுகைகள் வழங்கப்படுவது சமூகத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement

நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோத்தா  பய ராஜபக்ஷவுக்கும் இந்த சிறப்புரிமைகளும், சலுகைகளும் கிடைக்கின்றன.

எனவே இவ்வாறானவர்களுக்கான சலுகைகளை நீக்குவதற்கு நிச்சயம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 

ஆனால் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். 

Advertisement

இன்று சகல பகுதிகளிலும் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. 

மறுபுறம் அவ்வப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளும் மேலெழுகின்றன. 

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு, சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன