இலங்கை
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (02) மேற்கொண்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்தியாவை சேர்ந்த 38 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 04 கிலோ 112 கிராம் குஷ் போதைப்பொருளும் மற்றைய நபரிடமிருந்து 04 கிலோ 108 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.