Connect with us

பொழுதுபோக்கு

படப்பிடிப்பில் மலர்ந்த காதல்; சீரியலில் மகனாக நடித்த நடிகரை நிஜத்தில் திருமணம் செய்த நடிகை!

Published

on

Serial news

Loading

படப்பிடிப்பில் மலர்ந்த காதல்; சீரியலில் மகனாக நடித்த நடிகரை நிஜத்தில் திருமணம் செய்த நடிகை!

சமீபகாலமாக சீரியல்களில் இணைந்து நடித்து வரும் ஜோடிகள் தங்கள் ரியல் வாழ்க்கையிலும் இணைந்து வருகின்றனர். ஆலியா சஞ்சீவ், சித்து – ஸ்ரோயா உள்ளிட்ட பல ஜோடிகள் சீரியலில் ஜோடியாக நடித்து வாழ்க்கையில் ஜோடியாக மாறியவர்கள். ஆனால் சீரியலில் அம்மா – மகன் கேரக்டரில் நடித்து நிஜத்தில் கணவன் – மனைவியாக ஒரு ஜோடி மாறியுள்ளனர். அவர்கள் யார் தெரியுமா?இந்தியில் கடந்த 2010-2011-ம் ஆண்டு ஒளிபரப்பான சீரியல் ‘பியார் கி யே ஏக் கஹானி’. இதில் அம்மா கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை  கிஷ்வர் மெர்ச்சன்ட். இந்த சீரியலில் அவரது மகன் கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர், சூயாஷ் ராய். இவர்களின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றஙிருந்த நிலையில், சீரியலில் நடிக்கும்போது காதல்வயப்பட்டுள்ளனர். இதில், நடிகை கிஷ்வரை விட சூயாஷ் 8 வயது இளையவர். இவர்களின் காதலை பற்றி அறிவித்து திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த 2016-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. சூயாஷ் இந்து, கிஷ்வர் முஸ்லீம் என்றாலும் இவர்களின் காதலுக்கு மதம் ஒரு தடையாக இல்லை. இவர்களின் திருணத்திற்கு சூயாஷின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.அதன் பிறகே இவர்களின் திருமணம் நடந்துள்ளது. அதேசமயம் இவர்களுக்கு இடையில் இருக்கும் வயது வித்தியாசத்தை வைத்து பலரும் இவர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.அதே சமயம், கடந்த 2021-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் மகனுக்கு நிர்வாயர் என்று பெயரிட்டுள்ளதாக தம்பதி அறிவித்திருந்தனர். இருவருமே சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ஒருசில திரைப்படங்கள் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இதில் கிஷ்வர் இந்தி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். டியர் இஷ்க் என்ற வெப் தொடரில், மாயா கோஸ்டாவின் கேரக்டரில் நடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன