Connect with us

இலங்கை

நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

Published

on

Loading

நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன்பாப் தனது 71ஆவது வயதில் நேற்று சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப்பல்வேறு மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். குறிப்பாக அவருடைய முகபாவனைகள், தனித்துவச் சிரிப்பு மிகவும் பிரபலம் . முதலில் இசையமைப்பாளராகவே தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிமிக்ரிக் கலைஞர் எனப்பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். நீங்கள் கேட்டவை, வானமே எல்லை, தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, திருடா திருடா, மகளிர் மட்டும். சதிலீலாவதி, பூவே உனக்காக, தெனாலி, ப்ரெண்ட்ஸ். பம்மல் கே சம்பந்தம், கிரி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன