பொழுதுபோக்கு
முதல் படம் பெரிய வெற்றி, ஆனா இப்போ இவர் வேறு செயலில் வைரல்: இந்த போட்டோவில் இருக்கும் நடிகர் கண்டுபிடிங்க!

முதல் படம் பெரிய வெற்றி, ஆனா இப்போ இவர் வேறு செயலில் வைரல்: இந்த போட்டோவில் இருக்கும் நடிகர் கண்டுபிடிங்க!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். அதே சமயம் அந்த நடிகர்களின் முதல் படம் வெற்றி பெற்றதா என்றால் ஒருசிலருக்கு மட்டுமே நடந்திருக்கும். முதல் படம் வெற்றி கொடுத்த ஒரு நடிகர் அடுத்தடுத்த படங்களில் வெற்றியை தக்கவைக்க முடியாமல் தனது இடத்தை இழந்த கதையும் இங்கு நடந்துள்ளது, அந்த வகையில் மார்க்கெட் இழந்த ஒரு நடிகரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நடிகர் ஸ்ரீகாந்த். 2002-ம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்றார். அதன்பிறகு, ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயந்தார். இந்த படங்களுக்கு பிறகு இவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை.2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படத்திற்கு பிறகு, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான, ஒருநாள் ஒரு கனவு, பம்பர கண்ணாலே, உயிர், இந்திர விழா போன்ற படங்கள், வெற்றியை கொடுக்கவில்லை. நடுவில் சசி இயக்கத்தில் வெளியான பூ படம் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் ஸ்ரீகாந்த், இந்த ஆண்டு தினசரி, கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்ற 2 படங்களில் நடித்திருந்தார்.இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த், சிறையில் அடைக்கப்பட்டார், அதன்பிறகு ஜாமீனில் வெளியில் வந்த நிலையில், தற்போது ஸ்ரீகாந்தின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமா மட்டும் இல்லாமல் வெப் தொடர்களிலும் நடித்திருந்த ஸ்ரீகாந்த், நடிப்பில் தெலுங்கில் வெளியான ஹரிகாந்தா என்ற வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.நடிக்க வந்த புதிதில், பூமிகா, சினேகா, மீரா ஜாஸ்மின், உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்த ஸ்ரீகாந்த் தற்போது மார்ககெட் வீழ்ந்து பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.