இலங்கை
முன்னாள் எம்.பி.க்களுக்கு அஸ்வெசும
முன்னாள் எம்.பி.க்களுக்கு அஸ்வெசும
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்துச்செய்யப்படும். ஓய்வூதியத்தை இரத்துச்செய்த பின்னர் அவர்களுக்கு வாழ்வதற்குக் கஷ்டமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் என்பதை ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னரே அறிவித்திருந்தோம். ஜனாதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னர், அவர்களை எதற்காக மக்கள் பணத்தில் பராமரிக்கவேண்டும் – என்றார்.