பொழுதுபோக்கு
கைதிக்கு இன்ஸ்பிரேஷன் என் படமா? நானே அங்க இருந்துதான் எடுத்தேன்; லோகேஷிடம் கமல் சொன்ன உண்மை

கைதிக்கு இன்ஸ்பிரேஷன் என் படமா? நானே அங்க இருந்துதான் எடுத்தேன்; லோகேஷிடம் கமல் சொன்ன உண்மை
கார்த்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற கைதி படம் உருவாக கமலின் விருமாண்டி திரைப்படம் முன்னுதாரணமாக இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘கைதி’ திரைப்படத்தின் இறுதியில் ‘விருமாண்டி’ திரைப்படத்திற்கு லோகேஷ் கிரெடிட்ஸ் கொடுத்திருப்பார்.மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ல் வெளியான படம் கைதி. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்திருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் வெளியான கைதி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கைதி’ திரைப்படத்தை எழுதுவதற்கு ஊக்கமாக அமைந்தது கமல் நடித்த ‘விருமாண்டி’ திரைப்படம்தான் என லோகேஷ் கனகராஜ் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். ‘விருமாண்டி’ திரைப்படத்தின் கமலின் லுக் போலவேதான் ‘கைதி’ திரைப்படத்தின் கார்த்தியின் லுக்கும் அமைந்திருக்கும் என்றார். கைதி படத்தினை பார்த்துவிட்டு, லோகேஷ் கனகராஜிடம் பேசிய கமல், இந்தப் படம் உருவாக காரணமே விருமாண்டி படம்தான் சார் என்றேன். ஹாலிவுட்டில் 1960களில் வெளியான ஸ்பார்டகஸ் படம்தான் விருமாண்டி படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றார்.விருமாண்டி: கிராமத்துப் பின்னணியில் நடக்கும் பழிவாங்கல் கதையை, ஃபிளாஷ்பேக் முறையில் 2 வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் சொல்லும் புதுமையான உத்தியைக் கையாண்டது விருமாண்டி. கொலைக் குற்றவாளியின் வாக்குமூலம், சிறை அதிகாரியின் பார்வை என 2 கோணங்களில் கதை நகரும். இது பார்வையாளர்களுக்கு நடுநிலையான பார்வையை வழங்கியதுடன், மனித மனதின் சிக்கலான உணர்வுகளையும், சூழ்நிலைகள் ஒருவரை எப்படி மாற்றிவிடுகின்றன என்பதையும் ஆழமாகப் பேசியது. கமல்ஹாசன் சிறை சீர்திருத்தம் மற்றும் மரண தண்டனை குறித்த தனது கருத்துக்களை இந்தப் படத்தின் மூலம் முன்வைத்தார்.கைதி: ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கைதி’. போதைப்பொருள் கடத்தல் கும்பல், போலிஸ், மற்றும் கைதி எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் ஒரே இரவில் சந்திக்கும் சவால்களைப் பரபரப்புடன் சொல்லியிருப்பார் லோகேஷ். ஃபிளாஷ்பேக்குகள் இல்லாமல், நிகழ் காலத்தில் மட்டுமே முழு கதையும் நடக்கும். முன்னாள் கைதியின் உணர்வுபூர்வமான பயணமும், அவனது குடும்பத்திற்கான ஏக்கமும் படத்தின் அடிநாதமாக இருந்தது. கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ காவியப் படைப்பு என்றால், லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ ஒரு புதிய த்ரில்லர் வகைப் படம்.